மஹர சிறையில் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு – பொலிஸ் ஊரடங்கு அமுல்!

மஹர சிறைச்சாலையில் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவம், STF மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், மஹர பகுதியில் உடனடி பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மஹர சிறையில் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு – பொலிஸ் ஊரடங்கு அமுல்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதில், படுகாயமடைந்த கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், காயமடைந்த 6 கைதிகள் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி, பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மஹரவின் சில கிராம நிலதாரி பிரிவுகள் மற்றும் ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடனடி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாதுகாப்பு நிலைமையை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொன்தா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலாந்த பிரேமரத்ன ஆகியோர் நேற்றிரவு மஹர சிறைச்சாலை வளாகத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, நிலைமையை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மஹர சிறையில் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு – பொலிஸ் ஊரடங்கு அமுல்!