மத்திய கிழக்கு போர்ப் பதற்றம்: குவைத், தம்மாம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் விமானங்கள் கட்டுநாயக்கவுக்கு மீண்டும் திரும்பின
குவைத் மற்றும் தம்மாம் நோக்கிப் புறப்பட்ட இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள், போர்ச் சூழல் காரணமாக வான்பரப்பு மூடப்பட்டதால் பயணத்தைத் தொடர முடியாமல் பாதுகாப்பு நடவடிக்கையாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பின.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் மற்றும் தம்மாம் சர்வதேச விமான நிலையங்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள், அந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக வான்பரப்பு திடீரென மூடப்பட்டதால் பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, குறிப்பிட்ட வலயத்திற்கு அருகிலுள்ள வான்பரப்பில் சில நேரம் பாதுகாப்பாக வட்டமடித்துப் பறந்த விமானிகள், பயணிகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி விமானங்களை மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பி தரையிறக்கினர்.
இன்று (15) காலை அந்த இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.