இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

ஊவா மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு