மனு விசாரணை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
தன்னைக் கைது செய்வதையும் தடுத்து வைப்பதையும் தடுக்கும் உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பான மேலதிக பரிசீலனைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (23) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தன்னைக் கைது செய்வதையும் தடுத்து வைப்பதையும் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவைப் பெறும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பான மேலதிக பரிசீலனைகள் இன்று (23) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான நீதிமன்றத்தின் மேலதிக நடவடிக்கைகள் மற்றும் தீர்மானம் குறித்து அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் அதிக கவனம் நிலவுகிறது.