மட்டக்களப்பு முன்னாள், இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும், சட்டம் தனது கடமையை சுயாதீனமாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அரசியல் தலையீடுகளின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் பதவி அல்லது அந்தஸ்து பாராது சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுவது குறித்தும் அவர் விமர்சனம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்தை விமர்சித்திருந்த போதிலும், பின்னர் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்ததாகவும், தற்போது அவர்களுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிடுவதாகவும் கந்தசாமி பிரபு குற்றஞ்சாட்டியுள்ளார்.