கதிர்காம ஆடிவேல் பாதயாத்திரை காட்டுப்பாதை இன்று மூடப்படுகிறது

கதிர்காம ஆடிவேல் விழாவிற்கான பாதயாத்திரீகர்களின் காட்டுப்பாதை இன்று பிற்பகல் 3 மணியுடன் மூடப்படுகிறது. கடந்த 15 நாட்களில் 40,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்தப் பாதையை பயன்படுத்தியுள்ளதுடன், பாதயாத்திரையின்போது 4 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

கதிர்காம ஆடிவேல் பாதயாத்திரை காட்டுப்பாதை இன்று மூடப்படுகிறது

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு பாதயாத்திரீகர்களுக்காக திறக்கப்பட்டிருந்த கதிர்காமம் காட்டுப்பாதை இன்று (24) பிற்பகல் 3 மணியுடன் மூடப்படவுள்ளது. இந்த ஆண்டுக்கான பாதயாத்திரைக்காக கடந்த 10ஆம் திகதி திறக்கப்பட்ட இந்தக் காட்டுப்பாதை, 15 நாட்கள் பக்தர்களின் பயன்பாட்டில் இருந்தது.

உகந்தமலை முருகன் ஆலய வண்ணக்கரின் தகவலின்படி, இம்முறை இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்தப் பாதையை பயன்படுத்தி கதிர்காமம் சென்றுள்ளனர். எனினும், பாதயாத்திரையின்போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், உகந்தமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 15ஆம் திகதி தொடங்கியுள்ள நிலையில், அது எதிர்வரும் 30ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அதேவேளை, இந்த ஆண்டு காட்டுப்பாதை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சுமார் 16,000 பாதயாத்திரீகர்கள் பயணித்தது வரலாற்றில் முதல் முறையாக பதிவாகியுள்ளது.

கதிர்காம ஆடிவேல் பாதயாத்திரை காட்டுப்பாதை இன்று மூடப்படுகிறது