ஆகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றமில்லை – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. தற்போதைய அனைத்து எரிபொருள் விலைகளும் தொடர்ந்தும் அமலில் இருக்கும்.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.டி. ராஜகருணா தெரிவித்துள்ளார். இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை ரூ. 414 ஆகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ரூ. 495 ஆகவும், ஒட்டோ டீசல் ரூ. 382 ஆகவும், சுப்பர் டீசல் ரூ. 478 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ. 285 ஆகவும் எந்த மாற்றமும் இன்றி தொடரும். இதனால், ஆகஸ்ட் மாதத்திலும் தற்போதைய எரிபொருள் விலைகளே நடைமுறையில் இருக்கும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.