டுபாயில் கைது செய்யப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ இலங்கையில் கைது
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’, இன்று (09) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் காலை 8 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கொண்ட ரஞ்சி’, கடந்த ஜனவரி 9ஆம் திகதி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது அவருடன் அவரது மனைவி மற்றும் குழந்தையும் கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் படுகொலைச் சம்பவம் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பிலும் ‘கொண்ட ரஞ்சி’ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.