வெலிகம கடலில் துனிசிய சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு

வெலிகம, பரண கடே கடற்கரையில் அலைச்சறுக்கில் ஈடுபட்டபோது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 21 வயதுடைய துனிசிய சுற்றுலாப் பயணி இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெலிகம கடலில் துனிசிய சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு

வெலிகம, பரண கடே கடற்கரைப் பகுதியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 21 வயதுடைய துனிசிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (08) துனிசிய சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று அப்பகுதியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது, பலத்த காற்று காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதுடன், ஏற்பட்ட நீரோட்டத்தில் குறித்த இளைஞர் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.

அவரைத் தேடும் பணியில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர், கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தனியார் மூழ்காளர்கள் ஈடுபட்ட போதிலும், தேடுதல் நடவடிக்கை பலனளிக்கவில்லை.

இந்நிலையில், இன்று (09) காலை அதே கடற்கரையில் அவரது சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெலிகம கடலில் துனிசிய சுற்றுலாப் பயணி சடலமாக மீட்பு