DNA அறிக்கை நீதிமன்றத்தில்: ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிரான சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கில் அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விகாரையில் கைப்பற்றப்பட்ட கால் துடைப்பானில் கண்டெடுக்கப்பட்ட விந்து மாதிரி தேரரின் DNA-வுடன் ஒத்துப்போவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதில் பாதிக்கப்பட்ட சிறுமியின் DNA அடையாளங்கள் காணப்படவில்லை. காணொளிச் சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு 2027 ஜனவரி 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனுராதபுர முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கில், அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விகாரையில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கால் துடைப்பானில் கண்டெடுக்கப்பட்ட விந்து மாதிரி, பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA மாதிரியுடன் ஒத்துப்போவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த கால் துடைப்பான் மற்றும் முன்னதாக கைப்பற்றப்பட்ட ஆடைகளில் பாதிக்கப்பட்ட சிறுமியின் DNA அடையாளங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான காணொளிச் சான்றுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. வழக்கு தொடர்பான அறிக்கைகள் மேலதிக சட்ட ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கு விசாரணைகள் 2027 ஜனவரி 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.