உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முன்னாள் IGP பூஜித் ஜெயசுந்தரவுக்கு மரண தண்டனை!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்எச்சரிக்கை தகவல்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு, கொழும்பு விசேட மூவர் அடங்கிய உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முன்னாள் IGP பூஜித் ஜெயசுந்தரவுக்கு மரண தண்டனை!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக உளவுத்துறையினரிடமிருந்து முன்எச்சரிக்கை தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அவற்றின் அடிப்படையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு இருவரும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், தற்காப்புச் சாட்சியங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்காமல் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு சட்டப் பிழை எனக் கூறி சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி நடைபெற்ற மீள் விசாரணையின் பின்னர், நீதிபதிகள் பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோர் அடங்கிய விசேட மூவர் அமர்வு இன்று (31) தீர்ப்பளித்தது.

அதில், முன்எச்சரிக்கை தகவல்கள் இருந்தபோதிலும் தனது கடமையை நிறைவேற்றத் தவறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் முன்னாள் IGP பூஜித் ஜெயசுந்தர குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: முன்னாள் IGP பூஜித் ஜெயசுந்தரவுக்கு மரண தண்டனை!