எல்நினோவால் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – PUCSL எச்சரிக்கை
எல்நினோ நிலைமையால் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் எனவும், நீர் ஆதாரங்கள் வறண்டு போனால் மின் உற்பத்தி குறையக்கூடும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
எல்நினோ நிலைமையின் தாக்கத்தால் எதிர்காலத்தில் நாட்டில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை, எல்நினோ காரணமாக நீர் ஆதாரங்கள் வறண்டு போனால் நீர்மின் உற்பத்தி குறையக்கூடும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக மின்சார உற்பத்திக்கும் தேவைக்கும் இடையில் பற்றாக்குறை ஏற்பட்டால், எதிர்காலத்தில் மின்வெட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே.பி.எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான விலைகள் வெளியிடுவது தொடர்பாக இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.