எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடரும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

மத்திய கிழக்கு மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை நிச்சயமற்ற நிலை தொடர்வதால், உலகளாவிய எரிபொருள் விநியோக நிலைமை சீரடையும் வரை QR குறியீட்டு முறை தொடரும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடரும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

மத்திய கிழக்கு மோதல் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி காரணமாக உலகளாவிய எரிபொருள் விலை மற்றும் விநியோகத்தில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால், எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறைமை இன்னும் சில காலத்திற்கு தொடரும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்காக இந்த முறை தொடரும் என அவர் குறிப்பிட்டார்.

QR முறை மற்றும் அதிகரித்த எரிபொருள் விலைகள் இருந்தபோதிலும், எரிபொருள் நுகர்வு சிறிய அளவிலேயே குறைந்துள்ளதாகவும், டீசல் நுகர்வு சுமார் 10% மற்றும் பெற்றோல் நுகர்வு சுமார் 9% குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்தியாவசியத் துறைகளுக்கு தடையின்றி எரிபொருள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை தொடரும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ